அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் ஐயா

உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குச் சொந்தமையா

 

அர்ப்பணித்தேன் (நான்) அர்ப்பணித்தேன்

ஆவி ஆத்துமா சரிரம் அர்ப்பணித்தேன்  என்

 

1.

உள்ளம் உடல் எல்லாமே உமக்குத் தந்தேனையா

கள்ளம் கபடு இல்லாமல் காத்துக் கொள்ளுமையா  ஒரு – அப்பா

 

2.

உலகப் பெருமை சிற்றின்பம் உதறிவிட்டேனையா

கசப்பு வெறுப்பு காயங்கள் கடந்து போனதையா  – அப்பா

 

3.

வாக்குவாதம் பொறாமைகள் தூக்கி எறிந்தேன் நான்

ஆண்டவர் இயேசுவை ஆடையாய் அணிந்து

கொண்டேன் நான்           – அப்பா

 

4.

உமக்காய் வாழும் வைராக்கியம் உள்ளத்தில் வந்ததையா

எனக்காய் வாழும் எண்ணங்கள் என்றோ

மடிந்ததையா (செத்ததையா)                         – அப்பா

 



abba ennai muzuvathum arbpaniththen aiya

uyirodirukkum nalellam umakkus sonthdhamaiya

 

arbpaniththen ( nan) arbpaniththen

aavi aaththuma chariram arbpaniththen  en

 

1.

ullam utal ellame umakkuth dhanththenaiya

kallam kapadu illamal kaththuk kollumaiya  oru – abba

 

2.

ulakab berumai sirrinpam udharividdenaiya

kachabbu verubbu kayangkal katanththu bonathaiya  – abba

 

3.

vakkuvadham boramaikal thukki erinththen nan

aantavar iyesuvai aadaiyay aninththu

konden nan           – abba

 

4.

umakkay vazum vairakkiyam ullaththil vanthdhathaiya

enakkay vazum ennangkal enro

madinthdhathaiya (sethdhathaiya)                         – abba